தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!!

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!!

தெம்பனீஸ் பகுதியில் கனரக வாகனம் மீது சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சைக்கிளோட்டிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. 64 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .

ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

44 வயதுடைய கனரக வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து தெம்பனீஸ் அவென்யூ 2 க்கும் தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 11 க்கும் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் நேர்ந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 ஆம் தேதி காவல்துறைக்கு காலை 9.30 மணியளவில் தகவல் வந்ததாக 8 World செய்தித்தளம் கூறியது.