லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!!

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!!

மலேசியாவில் உள்ள sepang இல் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது.இச்சம்பவம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 17-ஆம் தேதி காலை சுமார் 9.10 மணியளவில் sepang இல் லாரி, இரண்டு பைக்குகள் என மொத்தம் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து நிகழ்ந்தது.

லாரி ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

லாரி ஜலான் புக்கிட் டுகாங்கில் சென்ற போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் பாதையில் சென்றது. மேலும் 6 வாகனங்கள் மோதியது என்று Sepang OCPD Ass Comm Wan Kamarul Azran Wan Yusof கூறினார்.

ஏழு வாகனங்கள் சமந்தப்பட்ட சாலை விபத்தில் 31 வயதுடைய நபரும்,53 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பைக்கில் பயணித்தவர்கள்.

மேலும் லாரி ஓட்டுநர் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.