ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!!

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!!

ரிவர் வேலி ரோடு கட்டிடத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி (நேற்று) காலை தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தீ விபத்தை கண்ட அருகே கட்டுமான வேலை செய்து கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் கட்டிடத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் ஓடி வந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த ஏணிகளை கொண்டு வந்து அதில் ஏறி கட்டிடத்தின் ஜன்னல் அருகே இருந்த குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர்.

உதவி செய்த வெளிநாட்டு ஊழியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

“இவர்கள் தான் உண்மையான வீரர்கள் “என்றும், “இவர்களுக்கு நாம் விருந்து வழங்க வேண்டும்” என்றும் பலர் கூறியுள்ளனர்.