பொன்னமராவதியில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!!

பொன்னமராவதியில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டக்கிளைத்தலைவர் பொப்பனாமலை தலைமையில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக நுழைவு வாயிலில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு பொன்னமராவதி வட்டக்கிளைத்தலைவர் பொப்பனாமலை தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலாளர் துரை முன்னிலை வகித்தார்.வட்டச்செயலாளர் ஜோதி,வட்ட துணைச்செயலாளர் பாண்டி,வட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி விளக்கி பேசினார்கள்.

மேலும் அனைத்து வட்டங்களிலும் புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தல்பணிகளை தோய்வின்றி தொடர முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்றாண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய 2ம் கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து பணிகளையும் புறக்கணித்து அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் செய்தனர்.இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.