சிங்கப்பூரில் தகவல் தொடர்பு, தகவல் மற்றும் நிதி துறைகளில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு குறித்து மனிதவள அமைச்சரான டாக்டர் Tan See Leng விடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பணிநீக்கம் செய்யப்பட்ட 5 நாட்களுக்குள் நிறுவனங்கள் மனிதவள அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியும் என்று கூறினார்.
அதற்கு கைகொடுக்க பொறுப்பான ஆட்குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு பணிக்குழுவை குறிப்பிட்டார்.
இது ஊழியர்களுக்கு புதிய வேலைகளைக் கண்டறிய உதவும் ஆதாரங்களையும்,நிதி உதவியையும் வழங்கி வருகிறது என்றும் கூறினார்.
டாக்டர் டான் கூறுகையில்,புதிய தொழில் மாற்ற திட்டங்கள் ஊழியர்களுக்கு புதிய திறன்களை வளர்க்க உதவுவதாக கூறினார்.