சீனாவில் கோவிட்-19 கிருமி பரவல் அதிகரிப்பதால் மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பட்டது.கிருமி பரவல் முறியடிப்பு கொள்கையின் ஓர் அங்கமாக மலேசியா சுகாதாரம் இந்நடவடிக்கைக்கு தயாராகிறது.சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு உலகில் சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.சீனாவில் கிருமி பரவல் அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக மலேசியா சுகாதார துறை அமைச்சர் Zaliha mustafa இவ்வாறு கூறினார்.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் அல்ல, தேவைப்பட்டால் மற்ற நாடுகளில் இருந்து வருவோர்க்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார். உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின் படி சீனாவில் உருவெடுத்த கிருமிவகை மலேசியாவில் கண்டறியபட்டதாக சொல்லப்படுகிறது.
சீனாவிலிருந்து கத்தார் செல்வோர் இன்றிலிருந்து முதல் கிருமி தொற்று இல்லை என்ற சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்.முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டர்வர்களாக இருந்தாலும் பயணம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்குள் பரிசோதனை செய்து இருக்க வேண்டும். பிரான்ஸ், இந்தியா, கனடா முதலிய நாடுகள் ஏற்கனவே அத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இப்பொழுது கத்தாரும் அதில் இணைந்துள்ளது.அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு நாளை மறுநாள் கிருமி பரிசோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு முன் கிருமி தொற்று பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என்ற மிதமான நடவடிக்கை என்று ஆஸ்திரேலியா அமைச்சர் Mark butler கூறி இருக்கிறார்.வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா வட்டார நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஏற்ப அது அமைந்து இருப்பதாக சொன்னார்.
இதற்கிடையே சீனா சிங்கப்பூரிலிருந்து முதல் சுற்றுலா குழுவை வரவேற்க தயாராகிறது. மார்ச் மாதம் முதல் சிங்கப்பூர் குழு சீனா செல்வதாக இங்குள்ள பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். சீனா வருகின்ற 8-ம் தேதி தனது எல்லைகளை முழுமையாக திறக்க திட்டமிட்டுள்ளது.சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன் சீனாவில் கோவிட் -19 கட்டுப்பாட்டை பற்றி தெளிவாக தெரிந்ததுக்கொள்ள வேண்டியிருப்பதாக பயண நிறுவனங்கள் கூறினர்.கிருமி பரவலுக்கு முன்பு இருந்த நிலையை உற்றுநோக்க சீனாவுக்கான பயண தொகுப்புக்கட்டணம் இருபது விழுக்காடு அதிகரித்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.விமான கட்டணம் உயர்வு,உலகளாவிய பணவீக்கம் அதற்கு காரணம் என்று கூறினர். சீனாவில் கிருமி பரவல் அதிகரித்து இருக்கும் சூழலில் Beijing,zhuangai,Guangzhou ஆகிய பகுதிகளுக்கு செல்ல அதிக வரவேற்பு இருப்பதாக பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.