தண்ணீர் குழாய் கசிவினால் அவதிக்குள்ளான குடியிருப்பாளர்கள்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள 65 டெஸன்சன் ரோடு அருகில் ரங்கூன் சாலை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
இச்சம்பவம் குறித்து செப்டம்பர் 1 அன்று அதிகாலை 4.30 மணிக்கு PUB அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழாய்க் கசிவை கண்டறிய சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக விரைந்தனர்.
இதனை PUB தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
47 ஓவென் சாலை, 49 டோர்செட் சாலை மற்றும் 9 குலௌசெஸ்டர் ஆகியபகுதியில் உள்ள வீட்டு வசதி வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் அந்தப் பகுதிகளுக்கு PUB அமைப்பானது தண்ணீர் லாரிகளை அனுப்பியது.
அங்குள்ள குடியிருப்பாளர்களுக்குத் தாற்காலிகத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட புளோக்குகளில் காலை 9.15 மணிக்குத் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது.
பைப்லைன் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
குழாய் கசிவு காரணமாக டெஸன்சன் சாலையில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து சாலையின் நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாக PUB தெரிவித்துள்ளது.
மேலும் குழாய் கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியது.
Follow us on : click here