“குடியிருப்பு வட்டார வணிகங்கள் புதிய நடைமுறைகளை கையில் எடுக்க வேண்டும்”- திரு.ஹெங்

"குடியிருப்பு வட்டார வணிகங்கள் புதிய நடைமுறைகளை கையில் எடுக்க வேண்டும்"- திரு.ஹெங்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள் மின்னிலக்கச் சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் ஹார்ட்லேண்ட் எண்டர்பிரைஸ் ஸ்டார் விருது விழாவில் பேசிய திரு.ஹெங், நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

மாறிவரும் நுகர்வோரின் பழக்கவழக்கங்கள் மற்றும் இ-காமர்ஸ் துறையில் வளர்ந்து வரும் போட்டியும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதில் சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த பத்தாண்டுகளாக புதுமை மற்றும் மீள்திறனை வெளிப்படுத்திய உள்ளூர் வணிகங்களை கௌரவித்தது.

இம்முறை 31 நிறுவனங்களுக்கு 42 விருதுகள் வழங்கப்பட்டன.

மூன்று தடவைகளுக்கு மேல் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத்தை கௌரவிக்கும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

வாடிக்கையாளர் சேவையில் சாதனைகள், மின்னணுவியலில் சிறந்து விளங்குதல் மற்றும் கலாச்சார பங்களிப்பு போன்ற பிரிவுகளில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு விருதானது வழங்கப்பட்டது.