தோல்சிகிச்சை குறித்த ஆய்வு!! சிங்கப்பூர் முக்கிய பங்காற்றும்!!

தோல்சிகிச்சை குறித்த ஆய்வு!! சிங்கப்பூர் முக்கிய பங்காற்றும்!!

சிங்கப்பூர்: தோல் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் சிங்கப்பூர் முக்கியப் பங்கை அளிக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் கூறியுள்ளார்.

ஆசிய மக்களை பாதிக்கக்கூடிய தோல் பிரச்சனைகளை ஆராய்வதில் சிங்கப்பூர் முன்னணி வகிக்க முடியும் என்றார்.

தேசிய தோல் ஆய்வு கழகமானது மற்ற நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் டெர்மட்டாலஜி இன்ஸ்டிடியூட் (SRIS) இன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்றார்.

சிங்கப்பூர் பல இன ஆசிய மக்களைக் கொண்டிருப்பதால் இங்கு அது குறித்து ஆய்வு செய்வது சுலபமென்றும் கூறினார்.