கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய தொழில்நுட்பம் ஆய்வு!!

கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய தொழில்நுட்பம் ஆய்வு!!

சிங்கப்பூர்: மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் மிக தீவிர மறுசுழற்சி செய்வதற்கான உள்கட்டமைப்பு உள்ளது. இத்தகைய உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகள் பல நாடுகளில் விரிவடைந்து வருகின்றன.

அதுபோன்று சிங்கப்பூரிலும் குப்பைகளை பயனுள்ள ஒன்றாக மாற்ற முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறது.

பெரிய தொழிற்சாலைகளில் இருந்து வீடுகளுக்கு பல்வேறு வகையான பொருட்களை மறுசுழற்சி செய்யலாம்.

இதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அது பயனுள்ள வகையில் இருக்குமா என்று ஆராயப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் தற்போது குப்பைகள் மற்றும் கழிவுகள் எரிக்கப்படுகின்றன.

இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும்.

இதனை தவிர்க்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) மாற்று வழி உள்ளதா என்பதை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

அந்த வகையில் கழிவுகளை எரிப்பதற்குப் பதிலாக மறுசுழற்சி செய்யலாம் என்று நிலைத்தன்மை சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

மறுசுழற்சி என்பது பொதுவாக கழிவு பொருட்களை கொண்டு புதிய பொருட்களை உருவாக்குவதை குறிக்கும் செயல்முறை ஆகும்.

இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதோடு அதே பொருளை மீண்டும் உருவாக்குவதற்கு தேவைப்படும் மூல ஆதாரங்களும், வளங்களும் பாதுகாக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளில் குப்பைகளின் அளவு குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வீடுகளில் இருந்து வரும் குப்பை 15 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் தொழிற்சாலை மற்றும் வணிக கட்டிடங்களில் இருந்து வரும் குப்பைகளின் அளவும் 30 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது