சிங்கப்பூரில் விலங்குவதைச் சட்டத்தை கடுமையாக்க கோரிக்கை!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விலங்குகள் நலச் சட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்படி விலங்கு நலச் சட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதனை உள்துறை,சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
மக்களின் கருத்துக்களை ஆலோசித்து,அதை சரியான முறையில் நிறுவனங்களுக்கு அனுப்புதல் மூலம் இது சாத்தியமானதாக கூறினார்.
நீ சூன் பகுதியில் நடைபெற்ற விலங்குகள் நலக் கொள்கைகள் குறித்த கலந்துரையாடலில் திரு.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
புறாக்களை கொல்லும் செயல் குறித்து கலந்துரையாடலின் போது கேள்வி கேட்கப்பட்டது.
புறாக்களை கொல்லும் முடிவு எப்படி எடுக்கப்படுகிறது என்பதில் இன்னும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கவும் ,தண்டிக்கவும் விலங்குவதை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் விலங்குகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதனால் விலங்குகளை துன்புறுத்துவதை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
விலங்குகள் நலன் தொடர்பான முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
Follow us on : click here