தென்காசியாவில் செயல்படும் உணவு விநியோக நிறுவனங்கள் குறித்து Momentum works யில்,இவ் வருடம் மிகவும் உணவு விநியோக நிறுவனங்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கும் என்று ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டு விற்பனையின் வளர்ச்சி விகிதம் 30 விழுக்காடாக இருந்தது.சென்ற 2022-ஆம் ஆண்டில் 5 விழுக்காட்டிற்கு குறைந்தது.
சென்ற 2022-ஆம் ஆண்டு வளர்ச்சிக்கு மலேசியா,வியட்நாம் போன்ற சிறிய சந்தைகளின் விரிவாக்கம் உதவியாக இருந்தது. ஆனால்,சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பெரிய சந்தைகளில் வீழ்ச்சியும் காணப்பட்டது.
சில நிறுவனங்கள் இணைய வழி மூலமாக மளிகை கடைகளையும்,சமையலறைகளையும் கைவிட்டது. இதற்கு செலவாகும் செலவுகள் அதிகம் என்பது மட்டுமே காரணம்.
உணவு நிறுவனங்கள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் நேரடியாக உணவுகங்களுக்கு செல்கின்றனர்.