நடப்பு சாம்பியன்ஷிப் லோ கீன் இயூ கால் இறுதிச் சுற்றில் தோல்வியை தழுவினார்...!!!
சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீரர் லோ கீன் இயூ ஒலிம்பிக் போட்டியின் காலிறுதியில் தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.
24 வயதான நடப்புச் சாம்பியன் லோ கீன் இயூ தனது கணுக்காலில் காயம் ஏற்பட்டாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார்.
ஆகஸ்ட் 2- தேதி நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க்கின் டேன் விக்டர் அக்சல்சன் சிங்கப்பூரின் லோ கீன் இயூவை 21-9, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
பேட்மிட்டன் வீரர் லோ கீன் இயூ, தன்னால் முடிந்தவரை முயற்சி செய்ததாகவும்,ஆனால் அந்த முயற்சி போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தோல்வியை நினைத்து வருந்துவதால் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.
தற்போது உலக தரவரிசை பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற டேன் விக்டர் அக்சல்சன் அடுத்ததாக இந்தியாவின் லக்ஷயா சென்னை எதிர்கொள்கிறார்.
Follow us on : click here