சிங்கப்பூரில் வழக்கமான சாலைச் சோதனை!! தப்பித்து ஓடிய சிறுவன்!! கிடுக்கு பிடியில் வெளிவந்த உண்மை!!

சிங்கப்பூரில் வழக்கமான சாலைச் சோதனை!! தப்பித்து ஓடிய சிறுவன்!! கிடுக்கு பிடியில் வெளிவந்த உண்மை!!

சிங்கப்பூரில் உள்ள கில்லிமார்ட் ரோட்டில் போக்குவரத்து காவல்துறை வழக்கமான சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

அப்போது ஹெல்மெட் அணியாமல் இ-பைக்கை ஓட்டி வந்த 16 வயது சிறுவனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பிக்க நினைத்து வேகமாக பைக்கை ஓட்டி காவல்துறையின் சாலைத் தடுப்பின் மீது மோதி கீழே விழுந்தான்.

அதன் பின், அங்கிருந்து அந்த சிறுவன் ஓட்டம் பிடித்தான்.

அந்த சிறுவனை அதிகாரிகள் விடாமல் துரத்தி சென்று கைது செய்தனர்.

இச்சம்பவம் மே 25-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.55 மணியளவில் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.

அந்த சிறுவன் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் வைத்திருப்பது தெரிய வந்தது.

மேலும் அந்த சிறுவன் ஓட்டி வந்த இ-பைக் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரிய வந்தது.அதனை நிலப் போக்குவரத்து ஆணையம் கைப்பற்றியது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் நேற்று(ஜூன் 3) கூறியது.