நேபாளத்தில் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி `யெட்டி ஏர்வேஸ்´ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் 72 பேர் பயணித்தனர். விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த 72 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் 71 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. இதுவரை நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் இது மிக மோசமான ஒன்று என்று கூறப்படுகிறது.
அதன் பதிவு பெட்டிகளைக் கண்டுபிடித்து அதனை ஆய்வு நடத்த நேபாள அரசு தெரிவித்தது. பதிவுப் பெட்டிகளும் கண்டறியப்பட்டன. இதன் பதிவுகள் சிங்கப்பூரில் ஆராயப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது. கண்டறியப்பட்ட பதிவு பெட்டிகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து தரும் படி நேபாள புலனாய்வுத்துறை சிங்கப்பூர் அரசிடம் கேட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்தது.