ஜோகூரின் இரண்டு சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள வாகன நுழைவு அனுமதி (VEP) தொகை மற்றும் காவல்துறை சம்மன்கள் குறித்தும் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான விவரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள தெரிவித்தனர்.
ஜோகூர் செல்லும் இருவழிச் சோதனைச் சாவடிகளில் சாலைப் போக்குவரத்துத் துறை வழக்கமான சோதனைகளை நடத்தி, VEP வாகன நுழைவு அனுமதியைப் பதிவு செய்ய நினைவூட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் VEPக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அந்த வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு VEP பதிவு குறித்து எச்சரிக்கை செய்யப்படும். VEP பதிவு முனைகள் ஜோகூரில் உள்ள டங்கா பே, இஸ்கந்தர் புத்ரி,ஸ்கூடாய் ஆகிய இடங்களிலும்,சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் பகுதியிலும் அமைந்துள்ளன.
சிங்கப்பூரின் தேசிய வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கம் (NPHVA), VEP பதிவேட்டை நிர்வகிக்கும் தனியார் நிறுவனமான TCSens, சிங்கப்பூரில் VEP சிக்கல்களைக் கவனிக்க மற்றொரு முன்னணியை அமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.