சிங்கப்பூரில் சென்ற ஜனவரி மாதம் 9-ஆம் தேதி காலை 7.36 மணியளவில் பெண்ணைக் கத்தி முனையில் 42 வயதுடைய நபர் பிடித்து வைத்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்றது காவல்துறை. சம்பவ இடத்திலேயே அவரை கைது செய்தது.
கைது செய்யப்பட்டவரின் பெயர் Mohamed Faizal Mohamed Ariff. சம்பவம் நடந்த இடத்தில் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்ததாகவும், அவர் போதைப் பொருள் உட்கொண்டதாகவும் தெரியவந்தது.
போதைப்பொருள் உட்கொண்டதால் அவரது மனநிலை பாதிக்கப் பட்டிருந்தது.இவ்வாறு மனநிலை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இவருடைய குற்றம் கடுமையானது. மீண்டும் இது போல் சம்பவம் நடக்கும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவருக்கு பிணை மறுக்கப்பட்டது என நீதிபதி கூறினார்.
இந்த குற்றத்திற்கு தண்டனையாக 15,000 வெள்ளி பிணை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அவருக்கு பிணையும் மறுக்கபட்டுள்ளது.