நேற்று (ஜூன் 21) சிங்கப்பூர் அனைத்துலக விவகார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்கிழக்காசியாவில் கடுமையான புகைமூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் காற்று மாசு குறியீடு ஆபத்தான நிலையை எட்டியது.
அந்த அளவுக்கு இந்த ஆண்டு மோசமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது.
எனினும் El Nino காலநிலை கடுமையான வறட்சியையும், வெப்பத்தையும் கொண்டு வரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அமைப்பு தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது.
சிவப்பு எச்சரிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறை.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தெற்கு ஆசியான் வட்டாரத்தில் எல்லை தாண்டிய காசு மாசுபடு ஏற்படாது வாய்ப்புள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.