புள்ளி பட்டியலில் 3 வது இடம்...!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர். பின்னர் சால்ட் 26 பந்துகளில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கலுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி, தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
விராட் கோலி 42 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், விராட் கோலி மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். அவர் மொத்தம் 62 அரைசதங்களை அடித்து, ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
26 பந்துகளில் அரைசதம் அடித்த படிக்கல் 50 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். படிக்கல் 1 ரன்னில் கேட்ச் ஆனார். இறுதியில், ஜிதேஷ் சர்மா 20 (10) ரன்களும், டேவிட் 23 (15) ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். 19 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஹஸில்வுட் பந்தில் கேட்ச் ஆனார். வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஹெட்மேயர் 11 ரன்களில் அவுட்டானார். துருவ் ஜூரல் 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் அவுட்டானார். ஷுபம் துபே 12 ரன்களில் அவுட்டானார்.அடுத்தடுத்து வந்த மற்ற வீரர்களும் சில ரன்களில் அவுட்டாயினர்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூரு அணியிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.சிறப்பாக விளையாடி வெளியூர் மைதானங்களில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியால், சொந்த மண்ணில் வெற்றி பெற முடியாமல் இருந்தது. நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு அணி சொந்த மண்ணில் வெற்றி பெற்று தன் கனவை நினைவாக்கியது. பெங்களூரு அணி மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan