ரமடான் சந்தை கேலாங் செராயில் நடைப்பெற்று வருகிறது.இந்த ஆண்டு 700 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் 20 விழுக்காடு கடைகள் காலியாக இருக்கிறது.சந்தையின் ஏற்பாட்டாளர்கள் மற்ற சந்தைகளிலிருந்து போட்டி அதிகரிப்பதாக கூறுகின்றனர்.
இதற்கு காரணம் கடை அமைப்பதற்கான செலவு அதிகமாக உயர்ந்ததே என்று வியாபாரிகள் கூறினார்கள்.
30 ஆண்டுப் பாரம்பரிய கொண்ட வடை கடை உள்ளது.
அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 வெள்ளி வாடகை.தற்போது அதற்கு 18,000 வெள்ளி ஆக உயர்ந்துள்ளது.
புதிய கடைகள் வராமல் இருப்பதற்கு கட்டண அதிகரிப்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
சந்தைகளில் சில பகுதியில் இடங்கள் காலியாக உள்ளது. அதனை வியாபாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.
இன்னும் பல சந்தைகள் திறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையானதாக விட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.