F1 கார் பயிற்சி தளத்தில் அதிகாரிகளை பரபரக்கவிட்ட ராட்சதபல்லி…!!!

F1 கார் பயிற்சி தளத்தில் அதிகாரிகளை பரபரக்கவிட்ட ராட்சதபல்லி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ் டிராக்கில் F1 கார்களின் பயிற்சியின் போது குறுக்கிட்ட ராட்சத பல்லியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று (செப்டம்பர் 21) இறுதிப் பயிற்சியின் போது, ​​ஒரு பெரிய பல்லி திடீரென பாதையில் நுழைந்தது.

பல்லியை பிடிக்க அதிகாரிகள் விரைந்தனர்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ராட்சத பள்ளியின் பின்னால் இரண்டு பேர் ஓடுவதைக் காணலாம்.

இந்த சம்பவத்தை பார்த்து அருகில் இருந்த சில டிரைவர்கள் சிரித்தனர்.

நல்லவேளையாக பல்லி சாலையை கடக்கும் நேரத்தில் அதிக கார்கள் செல்லவில்லை.

ஆஸ்டன் மார்ட்டின் ஓட்டுநர்கள் பெர்னாண்டோ அலோன்சோ மற்றும் லான்ஸ் ஸ்ட்ரோல் ஆகியோர் இருந்தனர்.

மாபெரும் பல்லியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கார் ரேசர்கள் பல்லிக்கு எதுவும் ஆகாத வண்ணம் திறமையாக கார்களை ஓட்டினர்.