வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்படும் கேள்விகள் பற்றி அறிவோம்.சிங்கப்பூரில் உலகளாவிய கோவிட் 19 நிறுவனத்தை எவ்வாறு அனுகுகிறது என்பதைப் பற்றிய அமைச்சின் நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சுகாதார அமைச்சர் ஹாங் கிங் காங் வரும் திங்கட்கிழமை நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் அதனை வெளியிடுவார்.
சீனா பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் ஏற்படுட கூடிய விளைவுகள் குறித்தும், சிங்கப்பூரில் புதிதாக பெரியளவில் கோவிட் பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சில நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் அதிக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள புதிய திட்டம் ஒன்று அனுமதி அளிக்கிறது.அதை குறித்து எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் முன் வைத்துள்ளனர்.
தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளில் தங்காமல்,குறைந்த பட்சம் தங்கும் காலம் முடிந்தவுடன் அதை விற்க முற்படிகின்றனர் சில வீட்டு உரிமையாளர்கள். அதைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்படும்.
ஆண்ட்ரிஷன் வட்டாரத்தில் சென்ற டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ சம்பவத்தில் இளம் தீயணைப்பு வீரர் மரணம் அடைந்த சம்பவம் குறித்தும் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் கேட்கப்படும்.