சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் ஹெண்டர்சன் ரோட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்க சென்ற இடத்தில் தீயணைப்பு வீரர் மயங்கி விழுந்து, பின்னர் அவர் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.
தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த முதல் தீயணைப்பு வீரர் இவரே.
நாடாளுமன்ற கூட்டத்தில் இவருடைய மரண விசாரணைக் குறித்து புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கேள்வி எழுப்பினார்.
உயிரிழந்த தீயணைப்பாளர் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதேபோல் அதற்கென விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனை உள்துறை துணை அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்தார்.
உயிரிழந்த தீயணைப்பாளர் Edward Go சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையில் முழு நேர தேசிய சேவையாளராக பணியாற்றினார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை துணை அமைச்சர் ஃபைஷால் பதில் அளித்தார்.
தற்போது Edward Go வின் மரணம் பற்றி காவல்துறை விசாரித்து வருவதாக தெரிவித்தார். காவல்துறை தனது விசாரணை முடிவு அடைந்த பின், அதனை மரண விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பர்.
அதனை மரண விசாரணை அதிகாரி ஆய்வு செய்வார். அதே சமயத்தில் இச் சம்பவத்தைக் குறித்து ஆராய்வு செய்ய குடிமைத் தற்காப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.