காலை சுற்றிய மலைப்பாம்பு...!!! போராடி உயிர் பிழைத்த கதை...!!!
பேங்காக்கில் 64 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மலைப்பாம்பு விழுங்க நினைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பெண்மணி வீட்டில் இரவு உணவு சமைக்க தயாராகிக் கொண்டிருந்த போது அவரது தொடை பகுதியில் திடீரென பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.
அவர் கீழே பார்த்தபோது, ஒரு மலைப்பாம்பு அவரது காலைச் சுற்றியிருந்தது.
உடனே அவர் அந்த மலைப்பாம்பின் தலையை இறுக்கிப் பிடித்தார்.
ஆனால் அந்த பாம்பு பிடியை விடவே இல்லை.
இதனால் அச்சமடைந்த அந்தப் பெண்மணி தன்னைக் காப்பாற்றுவதற்காக கூச்சலிட்டார்.
ஆனால் அவரது சத்தம் யாருடைய காதிலும் விழவில்லை.
சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்ற பக்கத்து வீட்டுக்காரர் அவர் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தார்.
இந்த பெண்மணியின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு விரைந்த அதிகாரிகள் அந்தப் பெண்மணியை காப்பாற்றினர்.
சுமார் 5 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு அவரைச் சூழ்ந்திருந்தது.
மலைப்பாம்புகள் இயல்பாகவே தனது இரையை விழுங்க நகர விடாமல் மெதுவாக இறுக்கி கொள்வதுண்டு
மலைப் பாம்பின் பிடியை விடுவிக்க அதிகாரிகள் அதை அடித்தனர். அதனால் அந்த பெண்மணிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்குப் பின் தற்போது அந்தப் பெண்மணியின் உடல்நிலை சீராக உள்ளது.
Follow us on : click here