சிங்கப்பூரில் வரும் ஆண்டுக்கான பொது விடுமுறை தேதிகள் வெளியீடு!!

சிங்கப்பூரில் வரும் ஆண்டுக்கான பொது விடுமுறைத் தேதிகள் வெளியீடு!!

சிங்கப்பூரில் அடுத்த வருடத்திற்கான(2025) பொது விடுமுறை தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதனை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது.

வரும் ஆண்டில் 4 நீண்ட பொது விடுமுறை வார-இறுதி விடுமுறைகள் உள்ளன.

பொது விடுமுறை வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை வருவதால் வார இறுதியுடன் சேர்ந்து நீண்ட வார இறுதி வரும்.

பொது விடுமுறைகளின் தேதிகள் :

ஜனவரி 1-புத்தாண்டு

ஜனவரி 29,30-சீனப் புத்தாண்டு

மே 1-தொழிலாளர் தினம்

ஜூன் 7-ஹஜ்ஜீப் பெருநாள்

ஆகஸ்ட் 9-தேசிய தினம்

டிசம்பர் 25-கிறிஸ்துமஸ்

மார்ச் 31-நோன்புப் பெருநாள், மே 12-விசாக தினம், அக்டோபர் 20-தீபாவளி ஆகிய பொது விடுமுறைகள் திங்கட்கிழமைகளில் வருகிறது.

ஏப்ரல் 18-புனித வெள்ளி வெள்ளிக்கிழமை வரும்.