Singapore Job News Online

பொதுமக்களே உஷார்!ஹாலிடே டிராவெல் பேக்கேஜ் மோசடி!

மோசடி கும்பல்கள் மக்களைப் பல நூதன முறையில் ஏமாற்றி வருகின்றனர்.தற்போது,Holiday travel Package மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.அதன் தொடர்பாக ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களிடம் காவல்துறை விசாரித்து வருகிறது.

சுமார் 48 பேர் அவர்களிடம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இழந்த மொத்த தொகை $ 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர் என்று காவல்துறை நேற்று (ஜூன் 1) கூறியது.

இவ்வாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் காவல்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன.

ஆன்லைன் ட்ராவெல் ஏஜென்சிஸ் மூலம் அவர்கள் ஏமாந்துள்ளனர்.அதற்கு “Sham travel packages´´ என்று பெயரிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

பணப்பரிமாற்றம் மூலம் அவர்களுக்கு கட்டணத்தைச் செலுத்தியதாகவும்,அவர்கள் பணத்தைப் பெற்றவுடன் அவர்கள் கூறியபடி சேவையைச் செய்யவில்லை.வாடிக்கையாளர்கள் அந்த ஏஜென்சியைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர் .ஆனால்,அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணையின் மூலம் ஏழு பேரைச் சந்தேகித்து அடையாளம் காணப்பட்டனர்.அவர்கள் 24 மற்றும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சந்தேகிக்கும் நபர்களில் ஒருவர் இதற்குமுன், கணினியைத் தவறாக பயன்படுத்துதல் சட்டத்தின்கீழ் அணுகல் குறியீட்டை அங்கீகரிக்கப்படாத வெளிப்படுத்தலில் செயல்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மே 26-ஆம் தேதி 29 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த குற்றத்திற்கு $10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே முதல் முறை குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படலாம்.

ஒரு விற்பனையாளர் அங்கீகாரம் பெற்ற பயணம் முகவரா என்பதை உறுதிப்படுத்த சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மற்றும் தேசிய பயண முகவர்கள் சங்கம் ஆகியவற்றில் சரிபார்க்கும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.

விமான டிக்கெட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் அல்லது நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

சேவை வழங்குனர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்துதல் அல்லது நேரடி வங்கி பரிமாற்றங்களைத் தவிர்க்கவும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

மோசடி செய்பவர்கள் தங்களை உண்மையானவர்கள் என்று நம்ப வைப்பதற்காக NRIC அல்லது ஓட்டுநர் உரிமத்தின் நகலை வழங்கலாம்.