பொதுமக்களே உஷார்……யாரும் இந்த தவறை செய்ய வேண்டாம்……

இந்த ஆண்டு மட்டும் Telegram app மோசடியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் குறைந்தது S$18,000 இழந்தனர் என்று Singapore Police Force மற்றும் Cyber Security Agency அறிக்கை மூலம் தெரிவித்தது.

மோசடி செய்வோர் பாதிக்கப்பட்டவரின் mobile நம்பரையும், telegram login code-யும் நண்பர்கள் போல பேசி தந்திரமாக ஏமாற்றி பெறுவார்கள்.

அதன் மூலம் அவர்களின் telegram account க்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களிடமும் இதே போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்தது.

எனவே பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும், Phone number, OTP மற்றும் telegram account verification code-ஐ யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்தது.

ஒருவேளை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் உடனடியாக தெரியப்படுத்தும்படியும் SingCERT இடம் இணைய வழி மூலம் தெரியப்படுத்தும் படியும் பொதுமக்களை அறிவுறுத்தினர்.