“பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படும்”- அமைச்சர் திரு.சண்முகம்

“பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படும்”- அமைச்சர் திரு.சண்முகம்

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் திரு.சண்முகம் கலவரங்களைத் தடுக்க சிங்கப்பூரில் கடுமையான சட்டங்கள் இருப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சிங்கப்பூர் அரசானது கவனமாக வடிவமைக்கப்பட்ட சட்ட கட்டமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை முக்கியமானதாக பார்க்கின்றது.

தேவையில்லாத கலவரங்களை தடுப்பதற்காக போராட்டங்களை தடை செய்வதற்கான சட்டங்கள், தவறான தகவல்களை குறிவைப்பதற்கான சட்டங்கள் மற்றும் வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் சட்டங்கள் ஆகியவை இருப்பதாக குறிப்பிட்டார்.

மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் கூட்டங்கள் நல்ல நோக்கத்துடன் தொடங்கலாம். மேலும் அது நேர்மையான இலட்சியவாதிகளால் அவை வழிநடத்தப்படலாம்.ஆனால் கலவரத்தை வேண்டுமென்றே உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வன்முறையை உருவாக்கலாம்.

இம்மாதிரியான இன அல்லது மத வெறுப்பு பேச்சு,வன்முறையைத் தூண்டும் பேச்சு, குறிப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் பேச்சுகளுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று அவர் கூறினார்.

அதனால் தான் நடவடிக்கை எடுக்கும் அரசு அமைப்புகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார். சட்டங்கள் கடுமையாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் அவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று திரு.சண்முகம் வலியுறுத்தினார்.

Follow us on : click here ⬇️