இணைய மோசடிகளிலிருந்து வாடிக்கையாளரை பாதுகாப்பது வங்கிகளின் தலையாயக் கடமை!!

இணைய மோசடிகளிலிருந்து வாடிக்கையாளரை பாதுகாப்பது வங்கிகளின் தலையாயக் கடமை!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் இணைய நிதி மோசடி நடந்து கொண்டிருக்கும் போதே அதைக் கண்டறியும் வழிமுறைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

சிங்கப்பூர் நாணய வாரியம் மற்றும் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் டிசம்பர் 16 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டமைப்பின் கீழ் வங்கிகள் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

புதிய கட்டமைப்பு நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மோசடியால் ஏற்படும் இழப்புகளை பகிர்ந்து கொள்வதை உறுதி செய்கிறது.

50,000 வெள்ளிக்கு மேல் உள்ள வங்கிக் கணக்குகளில் இருந்து 24 மணி நேரத்திற்குள் பாதிக்கு மேல் பணம் எடுக்கப்படும் போது நிதி நிறுவனங்கள் புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மோசடி நடந்தால் நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குப் பண பரிவர்த்தனையைத் தடுக்க அல்லது பணம் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

வங்கிகள் அதன்பின் உரிமையாளருடன் பரிவர்த்தனையை உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழந்த பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.