பாதுகாக்கப்படும் நகரம்!! பழமை வாய்ந்த வீட்டைச் சேதப்படுத்திய சுற்றுலாப்பயணி!!
இத்தாலி நாட்டின் பொம்ப்பெய் நகரில் ‘House of the vestal virgins’ என்னும் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீடு ஒன்று உள்ளது.
2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பொம்ப்பெய் நகரம் எரிமலை வெடித்தைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் அங்கு 2000 ஆண்டுக்கு முன் பொம்ப்பெய் நகர் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம்.
இத்தாலியின் பொம்ப்பெய் நகருக்கு சுற்றுலா வந்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருக்கும் வீட்டில் குடும்பத்தாரின் பெயர்களின் முதல் எழுத்துகளை மற்றும் ஆகஸ்ட் 7- ம் தேதியை சுவற்றில் எழுதினார்.
அந்த நபரின் நடவடிக்கையைக் கண்ட ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததாக CNN வெளியிட்டுள்ளது.
அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.
தானும் தனது இரண்டு மகள்களும் அங்கு வந்ததற்கான அடையாளமாக அவர்களது பெயர்களின் முதலெழுத்துகளைப் பொறித்ததாக கூறினார்.
மேலும் தான் செய்த தவறுக்கு அவர் மன்னிப்புக் கேட்டதாக இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து பொம்ப்பெய் தொல்லியல் பூங்கா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
Follow us on : click here