சிங்கப்பூரில் மூத்தோர்களுக்கான திட்டம்!! அதிகரிக்கும் விண்ணப்பங்கள்!!

சிங்கப்பூரில் மூத்தோர்களுக்கான திட்டம்!! அதிகரிக்கும் விண்ணப்பங்கள்!!

சிங்கப்பூர்: சமுதாய வீடுகளில் முதியோர் சுதந்திரமாக நடமாடும் வசதிகளை வழங்கும் EASE திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கூடுதல் வசதிகளை வழங்குவதற்காக இத்திட்டமானது EASE 2.0 ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு, சுமார் 5 மடங்கு அதன் மாதந்திர விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கூறினார்.

முதியோர்களுக்கு முதுமையின் சவால்களை சமாளிக்க உதவும் வகையில் சலுகை விலையில் வசதிகள் வழங்கப்படுகின்றன.

நுழைவாயிலில் சுவர் பொருத்தப்பட்ட மடிப்பு நாற்காலி மற்றும் கைப்பிடிகள் போன்ற புதிய வசதிகளைப் பெற மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 300,000 வீடுகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை புக்கிட் பத்தோக் குடியிருப்பாளர்கள் ஜூன் 2-ஆம் தேதி ஒன்று கூடி கொண்டாடினர்.

அங்குள்ள சில கிளப் தொகுதிகள் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புதுப்பித்தல் திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளன.

அதன் கீழ் மக்கள் தடையின்றி நடந்து செல்வதற்கு ஏற்ற வகையில் மேற்கூரை நடைபாதைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.முரளி பிள்ளை தெரிவித்தார்.