காலநிலை மாற்றங்களில் கடலில் பாதுகாப்பு இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்…!!!

காலநிலை மாற்றங்களில் கடலில் பாதுகாப்பு இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் தற்போதைய காலநிலையானது அடுத்த ஆண்டு (2025) மார்ச் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்று,பலத்த மழை, கடல் கொந்தளிப்பு மற்றும் மின்னல் தாக்கக்கூடிய அபாயத்தை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

கடலில் செல்பவர்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கடலில் செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:

* படகுகள் மற்றும் கப்பல்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக லைப் ஜாக்கெட் அணிய வேண்டும்.

* உயிர் காக்கும் உடைமைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்திருக்க வேண்டும்.

* கப்பலில் ஏறும்போதும் இறங்கும்போதும் கைப்பிடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

* கடல் பயணத்தின் போது அமர்ந்திருக்க வேண்டும்.

* உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

* கடல் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன், வானிலை எச்சரிக்கையை கவனிக்க வேண்டும்.

* அவசரகாலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்

* கடல் சீற்றமாக இருக்கும் போது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

* கடல்சார் செயல்பாட்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் உபகரணங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்,வாடிக்கையாளர்கள் உயிர் காக்கும் உடைகள் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.