சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!!

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று இரவு whatsapp செயலியில் கோளாறு ஏற்பட்டது.

நேற்று இரவு (ஏப்ரல் 12) இரவு 10:30 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் சுமார் 900 புகார்களைப் பெற்றுள்ளதாக டவுன்டெடெக்டர் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இது சிங்கப்பூர், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா உட்பட குறைந்தது 50 நாடுகளில் மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது.

பெரும்பாலான பயனர்கள் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்புவதில் சிரமப்பட்டனர்.

இதற்கு அவர்கள் மாற்று வழியாக மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை அணுகினர்.

இந்நிலையில் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா சிக்கலின் தொழில்நுட்ப பிரச்சனை குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை.