NETS சாதனங்களில் ஏற்பட்ட சிக்கல்!!

NETS சாதனங்களில் ஏற்பட்ட சிக்கல்!!

சிங்கப்பூரில் இன்று செப்டம்பர் 23 ஒரு சில இடங்களில் NETS கட்டண சாதனங்களில் ஏற்பட்ட கோளாறுகளால் மக்கள் அவதிக்குள்ளாயினர். NETS கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களில் சுமார் ஐந்து சதவீதம் பாதிக்கப்பட்டன.

அதனால் மாற்று கட்டண முறைகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

மேலும் விரைவில் சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரியும் சிலர் காலை 7 மணி முதல் கார்டு பரிவர்த்தனைகளில் சிக்கல் இருப்பதாகவும் CNA ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக DBS, POSB கார்டுகள் தொடர்பான பரிவர்த்தனைகளில் சிக்கல் இருப்பதாகவும் தெரிகிறது.

 

Follow us on : click here ⬇️