IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!!

IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!!

சென்னை: ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியானது மே 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் KKR vs SRH அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணி ரூபாய் 20 கோடி காசோலையும், ஐபிஎல் டிராபியையும் தட்டி சென்றது.

ஐபிஎல் 2024 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் வெறும் நான்கு அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றன. கடந்த ஐபிஎல் T20 2023 போட்டியின் சாம்பியன்ஷிப் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
சிஎஸ்கே ரசிகர்களை பெரிதும் கவலையடையச் செய்தது.

KKR,SRH,RR,RCB உள்ளிட்ட அணிகள் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றிருக்கு முன்னேறியது. இதில் RCB அணி எலிமினேட்டர் சுற்றிலும், RR அணி குவாலிஃபையர் 2விலும் தங்கள் வாய்ப்பினை இழந்தனர். இறுதியாக போட்டியானது KKR vs SRH அணிகளுக்கிடையே நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இரண்டாவதாக களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.ஃபீல்டிங்கை பொறுத்த வரை ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்சல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சுனில் நரேன், வைபவ் அரோரா மற்றும் வரும் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சுனில் நரேன் 6 ரன்களும், குர்பாஸ் அகமது 39 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழந்தனர். கடைசியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும் எடுத்து 10.3 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றியடைய செய்தனர்.

இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூபாய் 20 கோடி காசோலையும் ஐபிஎல் டிராபியும் பெற்ற தங்களுது வெற்றியைப் பதித்தது. அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றி கொண்டாட்டத்துடன் முதன் முதலாக IPL டிராபியை தன் கையால் தூக்கினார். அதன் பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ரோஜர் இருவரும் இணைந்து டிராபியை வழங்கினார்கள்.

ஐபிஎல் 2024 விருது மற்றும் பரிசு பெற்றவர்களின் விவரங்கள்:

ஃபேர் பிலே விருது- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன்- ரூபாய் பத்து லட்சத்தை பெறுகிறார், நிதீஷ் குமார் ரெட்டி.

பர்பிள் கேப் வின்னர்- ரூபாய் பத்து லட்சத்தை பெறுபவர் ஹர்ஷல் படேல்(24 விக்கெட்)- புவனேஷ் குமார் பெற்றுக்கொண்டார்.

ஆரஞ்சு கேப் வின்னர்- 10 லட்சத்தை பெறுபவர் விராட் கோலி(741 ரன்கள்)- ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றனர்.

மிகவும் மதிப்பு மிக்க வீரர்- ரூபாய் பத்து லட்சத்தை பெறுபவர் சுனில் நரைன்(488 ரன்கள் மற்றும் 17 விக்கெட்டுகள்)

மேலும் பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருதிற்கான ரூபாய் 50 லட்சம் பரிசு தொகையை பெற்றது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்.

ஐபிஎல் 2024 2 வது இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு ரூபாய் 12.5 கோடிக்கான காசோலையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.