சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனைத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்துள்ளது. சென்ற டிசம்பர் மாதம் சொத்து மேம்பாட்டாளர்கள் 170 வீடுகளை விற்பனைச் செய்தனர்.
நவம்பர் மாத விற்பனையைச் செய்ததை காட்டிலும் 35 விழுக்காடுகள் குறைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு, தனியார் வீட்டு விற்பனை இவ்வளவு குறைந்துள்ளது. இதுவே முதல் முறை.
உலகப் பொருளியலில் நெருக்கடி ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். இது குறித்து கவனிப்பாளர்கள் கூறுகையில், விடுமுறைக்காக வெளிநாடு சென்றதும் , விலை குறைவான புதிய வீடுகளைக் காண்பது காரணம் என்று முக்கிய காரணம் கூறினர். சீனாவில் கிருமி தொற்று காரணமாக அனைத்துலக எல்லைகள் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஆண்டு எல்லை கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதனால் வெளிநாட்டவர்கள் வீடு வாங்குவது அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 40 புதிய கட்டுமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினர்.
சென்ற டிசம்பர் மாதம் விற்பனையான வீடுகள் பாதி முக்கிய வர்த்தக பகுதிகளில் அமைந்துள்ளன. சீனாவில் அனைத்து உலக கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்பட்டதன் காரணமாக தனியார் விற்பனை மீண்டும் சூடு பிடிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.