சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் 51 வயதுடைய காளியப்பன் குமாரசாமி சிறை அதிகாரியின் முகத்தில் பலமாக குத்தியுள்ளார்.
மருந்து உட்கொள்வதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி சிறை அறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீண்டும் சிறை அறைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது அதிகாரியின் முகத்தில் பலமாக தாக்கினார்.
இதனால் அதிகாரிக்கு மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.
அவருக்கு முகத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டது.
காளியப்பன் தொடர்ந்து தாக்கும் முயற்சியில் ஆக்ரோசமாக இருந்தார்.
41 வயதுடைய அதிகாரி உடனடியாக சக அதிகாரிகளை உதவிக்காக தொடர்பு கொண்டார்.
பெப்பர் ஸ்பிரேயை கொண்டு காளியப்பனை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவம் நடந்த நாளன்று காளியப்பனுக்கும் சிறைக் கைதி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த கோபத்தில் அதிகாரியை அடித்ததாக கூறினார்.
இந்த குற்றத்திற்காக அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம். அல்லது பிரம்படி தண்டனையும் தீரப்பளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காளியப்பன் 50 வயதைத் தாண்டியவர் என்பதால் பிரம்படி தண்டனை விதிக்க முடியாது. அவர் செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.