சிங்கப்பூரில் கைதியின் பணத்தை திருடிய சிறை அதிகாரி!!

சிங்கப்பூரில் கைதியின் பணத்தை திருடியதாக 49 வயதான மூத்த சிறை அதிகாரி மீது, பிப்ரவரி 1ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்டது.

இச்சம்பவம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.

கைதிகளை விடுவிக்கும் போது அவர்களின் உடமைகளை திருப்பி செலுத்தும் பொறுப்பில் சிறை அதிகாரி இருந்தார்.

 

அப்போது அவரிடம் 10 சிப்லாக் பைகள் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றுள் நசாருதீன் என்ற கைதிக்கு சொந்தமான $406 அடங்கிய ஒரு பையை அவர் தனது பாக்கெட்டில் வைத்தார்.

அந்த கைதி சிறையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் $3306 வைத்திருந்தார்.

ஆனால் $2900 மட்டுமே அவருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது.

பணத்தை சரிபார்க்கும் போது பணம் குறைவதை கண்டறிந்த அவர், உடனே குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் மூத்த சிறை அதிகாரி பணத்தை எடுத்தது தெரிய வந்தது.

முதலில் மறுத்த சிறை அதிகாரி, பிறகு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இது போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.