சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்துள்ள நியூசிலாந்து பிரதமர்!!

சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்துள்ள நியூசிலாந்து பிரதமர்!!

சிங்கப்பூருக்கு முதன்முறையாக நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon வருகைப் புரிந்துள்ளார்.

அவர் சிங்கப்பூரில் ஏப்ரல் 14 (நேற்று) முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை இருப்பார்.

 

இன்று (ஏப்ரல் 15) அவருக்கு இஸ்தானாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படும்.

சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்துக்கும் இடையேயான நீண்ட கால நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக இந்த வருகை அமைந்துள்ளது.

அவருக்கு அளிக்கவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் அதிபரான தர்மன் சண்முகரத்தினம் அவர்களையும், சிங்கப்பூரின் பிரதமரான லீ சியென் லூங் அவர்களையும் சந்திப்பார்.

நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon சிங்கப்பூரின் துணைப் பிரதமர், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அவர்களையும் சந்திக்க உள்ளார்.