இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!!

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!!

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு.அன்வாருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

திரு அன்வாரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.

கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 43 பில்லியன் டாலர்களை தாண்டியது.

திரு அன்வார் 2022 இல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

பின்பு இந்திய உலக விவகார கவுன்சில் கூட்டத்தில் அன்வார் இப்ராஹிம் உரை நிகழ்த்தினார்.

இந்தக் கூட்டமைப்பில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு,இந்தியா ‘குளோபல் சவுத்’ அமைப்பில் மலேசியாவை வலுவான பங்காளியாக பார்க்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் 2025 ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் தலைவராக மலேசியா பதவியேற்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா தொடர்ந்து மலேசியாவுடன் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்ற நமது பகிரப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று கூறினார்.

மலேசியா பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற விரும்புவதாகவும் அதற்கு திரு அன்வார் மோடியின் ஆதரவை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.