சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி செப்டம்பர் 4 அன்று இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்திருத்தார்.
திரு.மோடியும் திரு.வோங் அவர்களும் இஸ்தானாவில் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.
ஷங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
திரு. மோடிக்கு பாராளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா-சிங்கப்பூர் வணிக வட்டமேசை மாநாட்டிலும் பிரதமர் மோடி உரையாற்றினார்,
இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் 4 உடன்பாடுகள் எட்டப்பட்டன.
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் உட்பட மேலும் சில தலைவர்களை திரு. மோடி அவர்களை சந்தித்து பேசினர்.
சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை டெல்லி வந்தடைந்தார்.
மேலும் மோடியின் ஐந்தாவது சிங்கப்பூர் பயணம் இதுவாகும்.
சமீபத்திய ஆண்டுகளில், சிங்கப்பூர்-இந்தியா உறவுகள் பல்வேறு துறைகளில் வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here