பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி…….

இந்தியா பிரதமர் நரேந்திரமோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

அதிகாரத்துவ சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்க மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இன்று (ஆகஸ்ட் 26) காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்தார்.அவர் கிரீஸ் நாட்டிலிருந்து நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஜெய் விக்யான் ஜெய் அனுசந்தன் என கோஷத்தை எழுப்பினார்.

அதன்பின் அங்கே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கதற்கான வாழ்த்துக்களை தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் உரையாற்றினார்.

“நான் கிரீஸில் இருந்தேன் தென்னாப்பிரிக்காவில் இருந்தேன். ஆனால்,என் எண்ணங்கள் உங்களுடன் (விஞ்ஞானி) இருந்தன´´ என்று கூறினார்.