அதிகரிக்கும் டுரியான் பழங்களின் விற்பனையால் விலை குறைய வாய்ப்பு…!!!

அதிகரிக்கும் டுரியான் பழங்களின் விற்பனையால் விலை குறைய வாய்ப்பு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டுரியான் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இந்த ஆண்டு முடிவடைய இன்னும் ஓரிரு வாரங்களே இருப்பதால் மேலும் அதிக டுரியான்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, முசாங் கிங் வகை டுரியான்களின் விலை கிலோவுக்கு 15 முதல் 16 வெள்ளி வரை குறையலாம் என கூறப்படுகிறது.

மலேசியாவின் தொடர் மழையால் கடந்த ஆண்டுடன்(2023) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் டுரியான் பழங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதனால் அவற்றின் விலையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இருப்பினும்,விரைவில் டுரியான் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வருவதால் அதன் விலையானது குறைய வாய்ப்பிருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனப் புத்தாண்டு ஜனவரி 29 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் இப்போதிலிருந்தே வாடிக்கையாளர்கள் டுரியான்களை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.