பொதுச் சேவைத் துறையில் சேவையாற்றிய மூவருக்கு ஜனாதிபதியின் உதவி தொகை…!!!

பொதுச் சேவைத் துறையில் சேவையாற்றிய மூவருக்கு ஜனாதிபதியின் உதவி தொகை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு உபகாரச் சம்பள விருதுகளானது ராஃபிள்ஸ் பாடசாலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கும்,ஹுவா சோங் பாடசாலையைச் சேர்ந்த ஒரு மாணவிக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் இஸ்தானாவில் வழங்கப்பட்டன.

பொதுச் சேவை ஆணையத்தால் வழங்கப்படும் அனைத்து இளங்கலை விருதுகளிலும் இது மிகவும் மதிப்பு மிக்க விருதாக பார்க்கப்படுகிறது.

இந்த விருதானது தன்னார்வ தொண்டு செய்யும் பொதுத் துறைக்குத் தேவையான பண்புகளைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

பொதுச் சேவை துறையில் இருப்பவர்கள் தங்களது அறிவு சார் எல்லைகளை விரிவுபடுத்தி பரந்த அளவிலான மக்களுடன் ஈடுபட வேண்டும் என்று திரு.தர்மன் சண்முகரத்தினம் கேட்டுக் கொண்டார்.

மேலும் உபகாரச் சம்பளம் என்பது நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் சேவைக்கான அழைப்பு என்று கூறினார்.இது உங்களை மேலும் பொறுப்பு மிக்க குடிமகனாக மாற்றும் என்று ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

மூவரும் பட்டம் பெற அமெரிக்கா செல்கிறார்கள்.

இவர்கள் மூவரும் தங்கள் இளமைப் பருவத்தை தன்னார்வத் தொண்டு செய்வதில் செலவிட்டனர்.

இதில் 19 வயது எமிலி டான் மற்றும் 18 வயது மரியன்னே வாங் ஆகியோர் பொது சேவை ஆணைய உதவித்தொகையையும், 20 வயதான திரு. டிலன் தோ,சிங்கப்பூர் காவல் படையின் உதவித்தொகையையும் பெற்றனர்.

ஜனாதிபதியின் உதவித்தொகை பெற்றவர்களான 19 வயது எமிலி டான்,தாயார் பொதுச் சேவையிலும், தந்தை ஆராய்ச்சியாளராகவும் இருக்கின்றனர். எமிலி டான் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க உள்ளார்.

தந்தை ஆயுதப்படையிலும், தாய் நிதித்துறையிலும் இருக்கும் 20 வயதான திரு. டிலன் தோ அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படித்து வருகிறார்.படிப்பு முடிந்ததும் சிங்கப்பூர் போலீஸ் படையில் சேருவார்.

மேலும் 18 வயதான மரியன்னே வாங் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் செல்வார். இருவரும் பட்டப்படிப்புக்குப் பிறகு அமைச்சகங்களில் சேவையாற்றவிருக்கின்றனர்.

ஆகஸ்ட் 13 அன்று ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற ஜனாதிபதியின் உபகாரச் சம்பளம் வழங்கும் விழாவில் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்திடம் இருந்து அவர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.