சீனாவின் Tiktok செயலியை அமெரிக்காவிற்கு விற்க கூடுதல் அவகாசம் அளித்த அதிபர் டிரம்ப்..!!!

சீனாவின் Tiktok செயலியை அமெரிக்காவிற்கு விற்க கூடுதல் அவகாசம் அளித்த அதிபர் டிரம்ப்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட் டான்ஸ் நிறுவனத்தின் Tiktok செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க கூடுதலாக 75 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால் அமெரிக்காவில் Tiktok செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

அமெரிக்க நிறுவனம் இந்த செயலியை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.

ஆனால் சீனா அதை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டிருந்தால் அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்கள் இதை நிர்வகித்திருப்பார்கள்.

பைட் டான்ஸின் பங்கு 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கும்.

அதிபர் டிரம்ப் சமீபத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 54 சதவீத வரியை விதித்தார்.

Tiktok செயலியை விற்றால் வரிகளைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.