வியட்நாமிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யா அதிபர்!!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியாவில் தனது அதிகாரத்துவ பயணத்தை முடித்தபின் அடுத்ததாக வியட்நாம் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் இன்று(ஜூன் 20) அதிகாலை வியட்நாமிற்கு வருகைப் புரிந்தார். அவரை வியட்நாம் துணைப் பிரதமர் டிரான் ஹாங் ஹா வரவேற்றார்.சிவப்பு கம்பளத்தில் வரவேற்கப்பட்டார்.
வடகொரியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடித்தபின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வியட்நாம் உலக வல்லரசுகளுடனான உறவுகளில் நடுநிலை வெளியுறவு கொள்கை எனும் `மூங்கில் ராஜதந்திரம்’ கொள்கையை பின்பற்றுகிறது.
புடின் ஐந்தாவது முறையாக ரஷ்யா அதிபராக பதவியேற்ற பிறகு சீனா மற்றும் வடகொரியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் வியட்நாம் மூன்றாவது நாடாகும். அவருக்கு வியட்நாம் முழு அரசு வரவேற்பு அளிக்க தயாராக இருப்பதாக கூறியது.
வியட்நாமில் ஹோசி மின் சமாதியில் முக்கிய தலைவரின் எம்பாமிங் செய்யப்பட்ட சடலத்தை வைப்பது உள்ளிட்ட மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here