சீனா அதன் எல்லைகளை முழுமையாக திறந்துள்ள நிலையில் , அதிகமான பயணிகள் வருகைப் புரிந்து வருகின்றனர்.இதனிடையில், வர்த்தகத் தொடர்பைப் புதுப்பித்தல் பற்றி அதிபர் Halimah Yacob பேசினார்.
சீன புத்தாண்டைக் கொண்டாட வர்த்தகச் சங்கம் கூட்டாக சேர்ந்து ஏற்பாடு செய்தது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் Halimah Yacob சீனா,சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்துவதைப் பற்றி பேசினார்.
சீனாவுடன் உறவை வலுப்படுத்துவதற்கு சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில்சபையின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.Covid-19 கிருமி பரவல் காலகட்டத்தில் சீனர் வர்த்தக, தொழில்சபை சீனாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான வர்த்தக உறவை நிலைநாட்ட முக்கியப் பங்கை அளித்துள்ளது.அவர் அதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
700-க்கும் அதிகமான உள்ளூர் வர்த்தக சங்கங்கள் கிருமி பரவல் காலகட்டத்தில்( 3 ஆண்டுகள்) உதவிச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பயணத்தொடர்பை மீண்டும் உருவாக்குவது முக்கியம் என்று கூறினார்.
கிருமி பரவல் முந்தைய நிலைமையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இருநாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் அவசியம் என்றும் கூறினார்.