சிங்கப்பூரில் திடீரென மூடிய பாலர் பள்ளி...!பெற்றோர்கள் புகார்..!
சிங்கப்பூர்: பெற்றோருக்கு போதிய முன்னறிவிப்பு அளிக்காமல் சேவைகளை இடைநிறுத்திய பாலர்பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) தெரிவித்துள்ளது.
தெம்பனிஸ் தெருவில் 86ல் செயல்பட்டு வந்த Metis Little Campus பாலர் பள்ளி ஆனது ஜூலை 2 திடீரென மூடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில் முந்தைய நாள் மட்டுமே பள்ளியிலிருந்து தகவல் அளிக்கப்பட்டதாக கூறினார்கள்.
இதற்கு அந்தப் பள்ளி சரியாக செயல்படாதது காரணமாக கூறப்படுகிறது.
பாலர்பள்ளிகள் தங்களின் சேவையை நிறுத்துவதற்கு குறைந்தது 6 மாதம் முன்னதாக பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
மேலும் இது பிள்ளைகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய பெற்றோருக்கு கிடைக்கக் கூடிய போதிய அவகாசத்தை அளிக்கும்.
Metis Little Campus திடீரென மூடியது செயல் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.
பெற்றோருக்கு போதிய அவகாசம் வழங்காமல் சேவையை நிறுத்திய இரண்டாவது மெடிஸ் நிறுவனத்தின் பாலர் பள்ளி இதுவாகும்.
ஏற்கனவே ரெட்ஹில் பகுதியில் இயங்கி வந்த அதன் பாலர் பள்ளி ஏப்ரல் மாதம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது தெம்பனிஸ் பகுதியிலும் பள்ளி மூடியது பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இனி அதன் உரிமையாளர்கள் பாலர் பள்ளியை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Follow us on : click here