துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!!

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!!

துருக்கியில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது பெண்கள் விருப்பத்தின் பேரில் செய்யும் அறுவை சிகிச்சை நடைமுறையை மேற்கொள்ள தடை செய்துள்ளது.

நாட்டின் புதிய சுகாதார அமைச்சக விதிமுறைகளின்படி, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சைகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே செய்ய முடியும்.

இதற்கான அதிகாரப்பூர்வ சட்ட விதிமுறைகளை துருக்கிய அரசாங்கம் வார இறுதியில் அறிவித்தது.

இந்த விதிமுறை துருக்கியில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

துருக்கிய ஜனாதிபதி எர்துவான் பெண்கள் இயற்கையான முறையில் குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உள்ள 38 நாடுகளில் துருக்கியில்தான் அதிக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

அந்த ஆண்டு பிறந்த 1,000 குழந்தைகளில் 584 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் தான் பிறந்துள்ளன.