Latest Tamil News Online

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்!

அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்புத் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்வோம். இந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம்?எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி முதலீடு செய்வது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?பற்றிய முழு விவரத்தையும் காண்போம்.

மாத வருமானம் :

அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம் மூலம் வயதானவார்கள் பெரிதும் பயன்பெறுவர்.மாதாந்திர வருமான திட்டத்தில் சேர்ந்தால் மாதம் மாதம் வருமானம் பெற முடியும். இதற்கு ஒரே ஒரு முதலீடு செய்தால் போதும். இது வயதானவர்களுக்கான ஏற்ற பாதுகாப்பான திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

முதலீடு :

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை ஒரு தனி நபர் சேமிப்புத் திட்டத்தில் டெபாசிட் செய்துக் கொள்ளலாம். அல்லது இதனைக் கூட்டுச் சேமிப்புத் திட்டமாகவும் தொடங்கலாம். கூட்டுச் சேமிப்பு திட்டத்திற்கு அதிகபட்சமாக 9 லட்சம் வரை டெபாசிட் செய்துக் கொள்ளலாம்.

யாரெல்லாம் கணக்கைத் தொடங்கலாம்?

குழந்தைகள் பெயரில் பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இதனை தனிநபர் டெபாசிட் செய்தும் தொடங்கிக் கொள்ளலாம். அதேபோல் கூட்டு சேமிப்பு திட்டமாகவும் டெபாசிட் செய்து தொடங்கி கொள்ளலாம். இந்தக் கணக்கை பத்து வயதுக்கு மேலான குழந்தைகள் அவர்களாக நிர்வகித்தும் கொள்ளலாம்.

எவ்வளவு ஆண்டு நீடிக்கும்?

இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தின் காலம் 5 ஆண்டு. இதன் காலம் முடிவடைந்த பின் இதனை மீண்டும் நீடித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தால் வயதானவர்கள் பெரிதும் பயன்படுவர். மாதாந்திர வருமானமாக இருப்பதால், வயதானவர்கள் யாரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்று நிலை இருக்காது.

வட்டி விகிதம்:

தற்போதைய வட்டி விகிதமானது 7.1%. இதில் Simple interest வட்டி மட்டும் தான். இதில் கூட்டு வட்டி கிடையாது. திட்டத்தை தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதம் நிறைவு அடைந்த பிறகுதான் வட்டி வழங்க ஆரம்பிக்கப்படும்.

திட்டத்தின் ஐந்தாண்டு காலம் முடியும் வரைவட்டி வழங்கப்படும். கணக்கில் இருந்து வட்டி தொகையை மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டிக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. ஆரம்பத்தில் வட்டி எப்படி இருந்ததோ திட்ட காலம் முடியும் வரை கணக்கில் அப்படியே கிடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் திட்டத்தின் அரசு சந்தை நிலத்திற்கு ஏற்ப விகிதத்தை மாற்றினால் அதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. திட்டத்தின் முடிவு காலம் முடியும் வரை அதே வட்டி விகிதம் தான் இருக்கும். வட்டி குறைந்தால் வருமானம் குறையுமே என்ற கவலையும் வேண்டாம். இதில் கிடைக்கும் வட்டியினை வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கிலும் கிரெடிட் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதத்தை வைத்து வைப்பு நிதி திட்டமாகவும் தொடர்ந்துக் கொள்ளலாம். இதன் மூலம் முதலீடானது இரு முறை பெருகும். இருமுறை பெருகுவதால் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும். சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தின் அடிப்படையில்இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்புத் தொகைக்கும் அதே வட்டி தான் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டு ஆகும். இந்தத் திட்டத்தை 1 அல்லது 3 ஆண்டுகளுக்கு வரை மூடப்பட்டிருந்தால் 2% வரை தொகை கழிக்கப்படும். இதே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எனில் 1% தொகை கழிக்கப்படும். அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.

இந்த திட்டத்தில் Nomini வசதியும் உண்டு. உங்கள் குடும்பத்தினர் உங்களுக்குப் பிறகு இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமனாக கருதப்படுவதால் வரி செலுத்த வேண்யிருக்கும்.

வருமானம்:1 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு 592 ரூபாய் வட்டி கிடைக்கும்.2 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு 1,183 ரூபாய் வட்டி கிடைக்கும்.3 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு 1,775 ரூபாய் வட்டி கிடைக்கும்.4 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு 2,367 ரூபாய் வட்டி கிடைக்கும்.4.5 லட்சம் முதலீடு செய்தால் 2,262 ரூபாய் வட்டி கிடைக்கும்.9 லட்சம் முதலீடு செய்தால் 5,364 ரூபாய் வட்டி கிடைக்கும்.

அஞ்சலகத்தில் 80சியின் கீழ் இந்த திட்டத்திற்கு வரி விலக்கு கிடைக்கும்.டிடிஎஸ் பிடித்தம் இருக்காது. வட்டி வருமானமாக கருதப்படுவதால் இதற்கு வருமானம் கிடைக்கும்.